Sunday, December 12, 2010

அவள்

அன்று நவராத்திரி. கோவிலுக்குச் சென்றிருந்தேன். பரதனுடன். வழிபாடுகள் எல்லாம் முடிந்தப் பிறகு, வெளியே வரும் போது கோவில் வளாகத்தில், ஒரு யுவதி இரு இளைஞர்களுடன் எதையோ விற்றுக் கொண்டிருந்தாள். பொதுவாக இப்படி விற்கும் பொருட்களில் எதையும் நான் வாங்குவது இல்லை. நடந்து கொண்டே அவர்கள் என்ன விற்கிறார்கள் என்று பார்த்தேன். தீபாவளி வாழ்த்து அட்டைகளை ஒரு இளைஞன் விற்க, காகிதத்தால் செய்யப்பட்ட, சிறு சிறு பூக்களைக் கொண்ட ஒருவகை பூங்கொத்தை அந்த யுவதியும் மற்றொரு இளைஞனும் விற்றுக் கொண்டிருந்தார்கள். வாங்கிக்கக் கோரி, அந்தப் பூங்கொத்தை என்னிடம் நீட்டினாள் அந்த யுவதி. புன்னகையுடன் வேண்டாம் என்று சொல்லி நகர்ந்து கொண்டே இருந்தேன். நான் வேண்டாம் என்றவுடன், அவளின் முகம் சுனங்கியது. பெருமூச்சு விட்டாள், ஏமாற்றத்துடன். அவளை கடந்து சென்ற பிறகு, காலணி அணிந்து கொண்டிருக்கும் போதுதான் அவளின் முகத்தையும் உடல் மொழியையும் மீண்டும் கண்ணிருத்தினேன். கண் மற்றும் கைகளின் அசைவிலேயே அதை வாங்கிக்கக் கேட்டாள். எனது மனதும் புத்தியும் ஒருங்கே வேலை செய்தன. வாய் பேசயிலாத யுவதி அவள். ஏறக்குறைய 25 வயது இருக்கும்.

காலணி அணிந்தப் பிறகு மீண்டும் அவள் பக்கம் சென்றேன். அவள் முகம் மலர்ந்தது. தீபாவளி வாழ்த்து அட்டைகள் மீது கவனம் போகவில்லை. அவள் வைத்திருந்த அந்தக் காகிதப் பூங்கொத்தைப் பார்த்தேன். கையால் செய்கைக் காட்டி, விலையைச் சொன்னாள். என்னால் புரிந்துக் கொள்ள இயலவில்லை. அதற்குள் அருகில் நின்ற அந்த இளைஞன் விலையைச் சொன்னான். அவன் சொன்ன விலை கூட சரியாக விளங்கவில்லை அப்பொழுது. தனது கையில் ஒரு பூங்கொத்தை மட்டுமே அவள் வைத்திருந்தாள். என்ன நிறம் என்று கூட பார்க்காமல் அதை எடுத்துக் கொண்டு, இன்னொரு கொத்தை அந்த  இளைஞனிடமிருந்து பெற்றுக்கொண்டேன். 10 வெள்ளியை அவளிடம் கொடுத்து மீதியை வைத்துக் கொள்ளச் சொன்னேன். என்னைப் புரியாமல் பார்த்தாள். அருகில் நின்று கொண்டிருந்த அந்த இளைஞன்  மீண்டும் விலையைக் கூறினான். ஒரு கொத்து 6 வெள்ளி என்று. ஆக இன்னும் இரண்டு வெள்ளியை எடுத்துக் கொடுத்தேன். அவள் முகத்தில் மகிழ்ச்சி. புன்னகை. நன்றியை அவள் மொழியில் மிகவும் அழகாகச் செய்து காட்டினால். இன்றும் அவளின் நன்றியுடன். நன்றி சொல்லி விடைக்கொடுத்தப் பிறகும்,  மனம் இல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். சிறு தூரம் நடந்த பிறகு, என்னுடைய முகவரி அட்டையை அவளிடம் கொடுக்கலாமா என்ற எண்ணம் எழுந்தது. எங்கே தவறுதலாக நினைத்துக்கொள்வாளோ என்ற மன பதற்றம் வேறு. நின்ற இடத்தில் இருந்தே அவளைப் பார்த்தேன். என்னுடைய இந்தச் செயல்களை அங்கே நின்று கொண்டிருந்த ஒரு பெண்மணி கவனித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்து புன்னகையும் செய்தார். 

மறுநாள் அதே கோவிலுக்குச் சென்றிருந்தோம். வாசலில் தேடினேன். அவள் அங்கு இல்லை. விஜயதசமி அன்று மீண்டும் அதே கோவில். அதே வாசல்படி. இம்முறை...... அவள் நின்று கொண்டிருந்தாள். உள்ளே செல்லும் போது என்னைப் பார்த்துப் புன்னகை செய்தாள். அவள் மீது ஏதோ ஓர் உணர்வு. அவள் உடல் குறை மீது நான் காட்டும் பரிதாபம் அல்ல இந்த உணர்வு, ஆனால் பிரியம். அவளின் இனிமையான முகம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. கோவிலில் அமர்ந்துகொண்டிருந்தபோது உள்ளே வந்தாள். அவளுடன் யாரோ ஒரு பெண்மணி. அவளின் அம்மா என்றுதான் நினைக்கிறேன். என்னைப் பார்த்தாள். மீண்டும் புன்னகை. அவள் அம்மா ஏதோ சொல்ல கைகளை அசைத்தவாறு. உணர்ச்சிப் பொங்க பதிலளித்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளின் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். வாய் மொழி இன்றி, கேள்விகளும் பதில்களும் அவளின் கண்கள் மற்றும் கைகள் அசைவுகளின் மூலமே பேசப்பட்டுக் கொண்டிருந்தன. மீண்டும் என்னைப் பார்த்து கை அசைத்தாள். புன்னகை செய்தாள். இம்முறை என்னுடைய முகவரி அட்டையைக் கொடுத்து விடலாம் என்று எண்ணி, ஒருவரிடம் பேனா வாங்கி, அதில் என் மின்னஞ்சல் முகவரியை எழுதிவைத்திருந்தேன். கொடுக்கலாம்  என்று எண்ணம் இருந்தாலும், தயக்கம் தடுத்துநிறுத்தியது. அவளின் குறையைக் கண்டு நான் பரிதாபப்படுகிறேனோ என்று தவறுதலாக நினைத்துவிட்டால்?
'எதாவது உதவிகள் தேவைப்பட்டால் எனக்கு மின்னஞ்ஞல் அனுப்பங்கள்' என்று சொல்லி, என் முகவரி அட்டையைக் கொடுக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். அப்படியே கொடுத்தாலும் நான் சொல்வது அவளுக்குப் புரியுமா?. அவளின் அம்மா அவளுடன் கைகளின் அசைவுகளாலேயே பேசிக் கொண்டிருந்தார். ஆக அவளுக்குக் கேட்கும் சக்தியும் இல்லை. நான் பேசினால் அவளுக்குக் கேட்கப்போவதும் இல்லை. இப்படியே நான் குழம்பிக் கொண்டிருக்கையில்....... என்னைப் பார்த்துப் புன்னகை செய்து.. கை அசைத்துச் சென்று விட்டாள்.

அவளிடம் வாங்கிய அந்தக் காகிதப் பூங்கொத்தை என் அறையில் உள்ள மேசையின் அருகிலேயே வைத்திருக்கின்றேன். அதைப் பார்க்கும் போதெல்லாம்..... புன்னகை.
இவளின் பெயர் என்ன? என்ன வயது? எங்கே பிறந்தாள்? எப்படி வளர்ந்தாள்? என்ன படித்திருப்பாள்? என்ன வேலை செய்கிறாள்? பிறவியிலேயே பேசவும் கேட்கவும் முடியாதா? இவளின் குடும்பம்? யாரை மணக்கப் போகிறாள்?

ஆனால், ஏதோ ஒரு தருத்தணத்தில் நான் அவளை உணர்ந்தேன். அவளும்.            

Thursday, July 29, 2010

ஒரு வாய்ப்பு

நினைத்து பார்க்கின்றேன்.

மீண்டும் ஒரு காலை.... எப்பொழுதும் போல அலுவலகத்திற்குச் செல்லவேண்டும்.

"'ஆ!! நான் தானே இது!!''' இன்றைய நாழிதளில் என்னுடைய புகைப்படம்!!

ஆனால்! ஏன் இது இறப்புச் செய்தியில் உள்ளது???

புரியவில்லையே!

ஒரு நிமிடம்.!!..... சற்று யோசிக்கின்றேன்!! நேற்று இரவு, உறங்கப் போகும் போது, லேசாக நெஞ்சு வலித்தது... அதன் பிறகு நினைவு இல்லை.! நல்ல தூக்கம்!

காலை..... மணி பத்து! எங்கே எனக்கு காப்பி?

அலுவலகத்திற்கு தாமதாகவிட்டது!!! என்னுடைய முதலாளியிடம் நன்றாக
வாங்கிக் கட்டிக்கொள்ளப்போகிறேன்!

"எல்லாம் எங்கே போனார்கள்!??"

"என்னுடைய அறைக்கு வெளியே கூட்டமாக இருக்கின்றது? 
சற்று பொருங்கள்... பார்க்கின்றேன்!!

நிறைய ஆட்கள்!... எல்லோரும் அழுகவில்லை.... ஆனால்! ஏன் சில பேர் மட்டும் அழுகிறார்கள்?

என்ன இது? என்னை தரையில் கிடத்தி வைத்திருக்கின்றனர்!!

"நான் இங்கே தானே இருக்கின்றேன்!!" நான் கூச்சலிட்டும், யாருக்கும் கேட்கவில்லையே!

"இதோ இங்கே பாருங்களேன்!! நான் சாகவில்லை!!!

 மறுபடியும் என் அறைக்கு போகின்றேன்!

"நான் இறந்து விட்டேனா??

எங்கே என் மனைவி? என் குழந்தை? அம்மா? அப்பா? நண்பர்கள்?

அவர்கள் எல்லாம் வெளியே இருக்கிறார்கள்! ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்கிறார்கள்!

என் மனைவி அழுகிறாள்!..... மிகவும் சோகமாக இருக்கிறாள்!!

என்ன நடந்ததது என்று தெரியாமல்.. அவள் அம்மா அழுகிறாள் என்று எனது பெண் குழந்தையும் அழுகிறாள்!

 என் குழந்தையிடம் 'நீ எனக்கு உயிர்' என்று சொல்லாமல் நான் எப்படி இறக்க முடியும்?

நான் அவளை நன்றாக வளர்த்தேனா?



உலகத்தில் நீ தான் அழகி... மிகவும் பாசமானவள் என்றும் சொல்லாமல் எப்படி என் மனைவியிடம் இருந்து நான் பிரிவது?

என்னுடைய வளர்ச்சிக்கு நீங்கள் இருவருமே முக்கிய காரணம் என்று என் பெற்றோர்களிடம் சொல்ல வேண்டுமே!!!

என் நண்பர்கள் இல்லை என்றால்... எத்தனையோ தவறுகள் செய்து இருப்பேனே! என் வாழ்நாள் முழுவதும் நல்லது கெட்டதுக்கு என் பக்கம் நின்ற என் நண்பர்களை எப்படி மறப்பது?? நான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்காமல் எப்படி நான் போக முடியும்!?







இதோ! என்னுடைய நண்பன்! மூலையில் நின்றுக் கொண்டு கண் கலங்குகின்றான்!

ஒரு காலத்தில் நெருங்கிய நண்பன்.. சிறு கருத்து வேறுபாடினால்
இருவருமே பிரிந்துவிட்டோம்! அன்று முதல் இருவரின் பயணமும் வேறுபட்டது!

அவன் அருகில் செல்கின்றேன்... கை கொடுத்து மன்னிப்பு கேட்கின்றேன்! "எல்லாவற்றிக்கும் நான் தான் காரணம்.. என்னை மன்னித்துவிடு! நம் இருவரும் எப்போதும் போலவே நல்ல நண்பர்களாக மாறிவிடுவோம்!"

அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை! இன்னும் அதே தலைக்கணத்தில்! நான் மன்னிப்புக் கேட்டும்...................

ஆனால், ஒரு நிமிடம்! அவனால் என்னை பார்த்திருக்க முடியாதே! பிறகு எப்படி நான் கை கொடுத்தது அவனுக்கு தெரியும்!?

ஆக! நான் உண்மையிலேயே இறந்து விட்டேனா!?

என் அருகில் நானே அமர்ந்துக்கொண்டேன்!........... அழுகை!


கடவுளே! தயவு செய்து... இன்னும் சிறிது நாட்கள் எனக்கு கொடு!!

என் மனைவி... அம்மா..அப்பா...குழந்தை...  நண்பர்கள்.. இவர்கள் மீது நான்
எவ்வளவு அன்பு வைத்திருக்கின்றேன் என்று தெரிவிக்காமலேயே இறந்து விட்டேனே!

என் மனைவி அறைக்கு வருகிறாள்!! மிகவும்....... மிகவும் அழகாக இருக்கிறாள்!


 நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்று கூறியும்... அவள் காதில் விழவில்லை!
இதற்கு முன்பும்... 'நீ மிகவும் அழகாக இருக்கிறாய்' என்று நான் கூறியது கிடையாது!!!

இறைவா!!! தயவு செய்து... இன்னும் கொஞ்சம் நேரம் கொடு!!

அழுகை!............................. அழுகின்றேன்!

என் குழந்தையை கட்டித் தழுவவேண்டும்! ... என் அம்மா சிரிப்பதை பார்க்க வேண்டும்!!  என் அப்பாவை பெருமைப் படுத்தவேண்டும்!! என் நண்பர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்!

நரகம்!..................................அழுகிறேன்!!

கத்துகின்றேன்!

இறைவா!! இறுதியாக ஒரு வாய்ப்பு கொடு!!!!

திடீரென்று... 'ஏன் தூகத்தில் கத்துகிறீர்கள்?' என் மனைவி கேட்கின்றாள்!
'கெட்ட கனவு ஏதாவது கண்டீர்களா?'

நான் தூக்கத்தில் இருந்தேன்.

நான் கண்டது எல்லாம் கனவு!

என் மனைவி .. என் அருகே!... நான் பேசுவது அவளுக்கு கேட்கின்றது!
வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான தருணம்!!!

அவளை இருகக் கட்டிக்கொண்டேன்!

'உலகத்திலேயே நீதான் அழகானவள்! மிகவும் பாசமானவள்!
நீ எனக்கு உயிர்!'

இதை சொன்னவுடன்.. அவள் கண்கள் ஈரமாகின! அவள் முகத்திலோ
இனம் புரியாத புன்னகை!

நன்றி ! மிக்க நன்றி!...........இரண்டாவது வாய்ப்புக்கு மிக்க நன்றி இறைவா!

இப்பொழுதும் காலம் கடந்துவிடவில்லை. அகங்காரத்தை விட்டொழியுங்கள்..
கடந்ததை மறந்துவிடுங்கள்! அன்பை பகிர்ந்துக்கொள்ளுங்கள்...

தோழமையாக இருங்கள்!

எப்பொழுதும் புன்னகையுடன் இருங்கள்! எப்பொழுதும்! இதோ! நமக்காக இன்னும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது!!

செய்வதை.. முழு மனதுடன் செய்யுங்கள்!

தவற்றை திருத்திக் கொள்வதில் தான் வாழ்க்கை...




-- நண்பர் காந்தி, இந்த செய்தியை மின் அஞ்சல் வழி இன்று காலை (16 July 10) அனுப்பி இருந்தார். நன்றி. படிக்கும் போது ஏதோ சிறிய தடுமாற்றம். ஆங்கிலத்தில் இருந்ததை தமிழில்.

Monday, April 12, 2010

புகைப்படம்

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம். 2004-ஆம் ஆண்டில், Broadcasting பயிலவந்த நான், கோலாலம்பூரின் அபâத வளர்ச்சி கண்டு, மூன்றே நாட்களில் எனது பிறப்பிடமான சுங்கை பட்டாணிக்கு ஓடிவிட்டேன்... தங்கிய மூன்று பகலும் இரு இரவும் மறக்க முடியா அனுபவம்.

ஆடம்பர அடுக்கு மாடியின் பதினைந்தாவது மாடியில் உள்ள வீட்டில் எனக்¦¸ýÚ தனி அறை. இரவு நேரத்தில், அந்தô பதினைந்தாவது மாடியிÄ¢ÕóÐ பார்த்தால்.. கோலாலம்பூர் மாநகரம் வண்ண விளக்குகளால் மின்னும். இதைô பார்த்து ரசித்தேனா என்னவோ தெரியவில்லை, ¬னால் பார்த்து பயந்தேன். இரவு நேரம் முழுவதும் எனக்குò துணையாக இருந்தது வாகனங்களின் இரைச்சல் சத்தம்


பகலில் எங்கு நடக்கிறேன் என்று தெரியாமல்.... நடந்¾¢ருக்கிறேன். கோலாலம்பூர் வாசிகளின் இயந்திர வாழ்க்கை என்னை ஆச்சரியப்படுத்தியது. ஆனால், 2005-ஆம் ஆண்டில் மீண்டும் அதே கல்லூரியில், அதே படிப்பைô பயில, கோலாலம்பூருக்கு வந்தேன். சற்று நீண்ட முடியுடன், அதிகாலை ஐந்து மணிக்கு பூடு-வில் இருக்கும் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினேன். இம்முறை நண்பன் காளிதாஸ் துணையுடன். ஆரம்ப மற்றும் இடைநிலை பள்ளிகளில் அனுபவித்த வாழ்க்கை, கல்லூரி காலத்தின் போது எனக்குì கிடைக்க வில்லை. :) வாழ்க்கைக்கான பல விஷயங்களைì கற்றுக்கொண்ட காலமும் அதுதான். அந்தî சமயத்தில்தான், நண்பர் .. சிவத்தின் கவிதை நூல் வெளி£ட்டு விழாவிற்குî செல்ல வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கும் சிவத்திற்கும் பழக்கம் இல்லை. (தற்போது ஒரே துறையில் வேலை செய்வதால் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்). நான் தங்கியிருந்த வீட்டில் நண்பன் காளிதாஸின் அண்ணன், யுவா-வும் தங்கியிருந்தார். மன்னிக்கவும். யுவா தங்கியிருந்த வீட்டில்தான் நான் தங்கியிருந்தேன். சுமார் 3 வருடம் எனக்கு அடைக்கலம் கொடுத்த அந்த வீட்டில்தான் யுவாவைî சந்திந்து, நூல் வெளி£ட்டு விழாவிற்கான அழைப்பிதழை, சிவம் கொடுத்தார்.  

நூல் வெளியீட்டு விழாவிற்கு நண்பன் ரமேசும் உடன் வந்திருந்தான். விழாவிற்குò தமிழக எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் வருகையளித்திருந்தார். நூல் வெளியீட்டு விழாவிற்கான ச¸Ä காரியங்களும் நடந்து முடிந்த பிறகு... வருகையாளர்களில் சிலர் (சிலர் என்றே ஞாபகம்) எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நானும் நண்பன் ரமேசும், தயார் செய்யப்பட்டிருந்த உணவு பக்கம் சென்றோம். ரமேசுக்கு எப்படி என்று தெரியவில்லை... காலையில் பசியாராததால் அங்கே வைக்கப்பட்டிருந்த கேசரியின் மேலே மோகமாக இருந்தேன்

உண்ட பிறகு, நாற்காலியில் அமர்ந்து ரமேசுடன் அளவளாவிக் கொண்டிருந்த போது, யுவா என்னை அழைத்தார். மனுஷ்ய புத்திரனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து즸¡ûÇ சொன்னார். புன்னகை செய்தவாறே.. வேண்டாம் என்று மறுத்தேன். அவர் முகம் சற்று மாறியது. அப்பொழுதும் கூட மனுஷ்ய புத்திரனின் முகத்தை நான் கவனிக்கவில்லை. பொதுவாக எந்த ஒரு விஷயமாகட்டும் ...அதில் முழுமையாக ஈடுபடவில்லை என்றால் அதில் எனக்கு நாட்டம் இருக்காது. அவரின் எந்தவொரு படைப்புகளையும் படிக்காத நான், அவர் அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதை அசௌகரியமாக நினைத்தேன். நான் புகைப்படம் எடுத்துக்கொள்ள மறுத்ததிற்கு, யுவா என்ன நினைத்தாரோ தெரியவில்லை. கல்லூரி காலத்தின் போதும்... யுவா-விடம் உரையாடியது குறைவுதான். அந்தக் காலகட்டத்தில் யுவா மலேசியாவின் இளம் எழுத்தாளராகò திகழ்ந்தார்யுவா வாங்கி, படித்து முடித்த இலக்கியப் புத்தகங்களை மட்டுமே நான் படித்¾¢ருக்கிறேன். மாதம் ஏதாவது ஒரு புத்தகத்தை வாங்கிô படிக்கலாம் என்ற எண்ணம் இருந்தாலும், கையில் பணம் இருக்காது. ஆக, இலக்கியப் படைப்புகளைô புத்தக வடிவிலோ அல்லது சஞ்சிகை வடிவிலோ வாசிக்கத் தொடங்கியதற்குì காரணம் அண்ணன் யுவா. இலக்கியô படைப்புகளைô புதிதாக வாசிக்கò தொடங்கிய காலத்தில், எனக்கு எது எளிதாக உள்வாங்கிக்கொள்ள முடிந்ததோ...அதை மட்டுமே படித்திருக்கிறேன். வாசிக்கத் தொடங்கி... மூன்று அல்லது நான்கு பத்திகளைò தாண்டிய பிறகும் எனக்கு புரியவில்லை என்றால் அந்தப் பதிப்பை படிக்க மாட்டேன். உயிர்மை என்ற ஒரு சஞ்சிகையை யுவா மாதந்தோறும் வாங்குவார். அந்த சஞ்சிகைக்கு மனுஷ்ய புத்திரன்தான் ஆசிரியர் என்பது எனக்குò தெரியாது. கவிதை எழுதுவது இவரின் சிறப்பு. 



கல்லூரி படிப்பு முடிந்து, நானும் கோலாலம்பூர் வாசியாக மாறிவிட்டேன். கடந்த இரு ஆண்டுகளாக, இணையம் எனது வாழ்வின் அன்றாடத் தேவையாகி விட்டது. தற்போது செலவு ஏதும் செய்யாமல், உயிர்மை மற்றும் காலச்சுவடு போன்ற மாத சஞ்சிகைகளை இணையம் வாயிலாகவே படித்துக் கொள்கிறேன். அப்பொழுதும் கூட மனுஷ்ய புத்திரன் எனது கண்ணுக்குò தெரியாமலே இருந்து வந்தார். இரண்டு வாரத்திற்கு முன்பு, உயிர்மை சஞ்சிகையை படித்துக் கொண்டிருந்த போது, மனுஷ்ய புத்திரனின் 'எல்லாவற்றிற்கும் பின்னே ஒரு கதை இருக்கும்' என்ற கவிதையைô படித்தேன். படித்து முடித்த மறுகணமே, அந்த நூல் வெளியீட்டு விழாதான் என் நினைவிற்கு வந்தது. யுவாவும் தான். ஏதோ ஒரு காரணத்திற்காக, தொலைத்த என்னை மீண்டும் அந்தக் கவிதையில் கண்டு கொண்டேன். மனுஷ்ய புத்திரனால் நடக்க இயலாது. சக்கரவண்டிதான். கவிதையைô படித்து முடித்து அவரின் புகைப்படத்தைô பார்த்த பிறகு.. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் கண்ட அதே மனுஷ்ய புத்திரன் எனது நினைவிற்கு வந்தார். எளிதாகக் கிடைத்த எந்த விஷயத்திலும்... நமக்கு அவ்வளவாக ஈடுபாடு இருப்பது இல்லை. அதன் அருமைகளை நாம் புரிந்து கொள்வதும் இல்லை



என்னைக் கண்டு கொண்ட கவிதை. 



அறியத்தான் வேண்டுமா
நீ அதை

          புல் தரையின்  நடுவே கிடக்கும்
          ஒரு கைப்பையைப் பற்றி

          ஒரு இடிந்த சுவரில் எழுதப்பட்ட
          சூசகமான வாக்கியம் பற்றி

          ஒரு இரவிலும் அணைக்கப்படாத
          ஒரு குழல் விளக்கினைப் பற்றி

          கொடியில் காயும் ஓர் ஆடையின்
          ரத்தக் கறை பற்றி

எல்லாவற்றிற்கும் பின்னே
ஒரு கதை இருக்கும்

*

காரணங்கள் உனக்கு
தெரியத்தான் வேண்டுமா

          ஒரு வழிப்போக்கனின் பாதையில்
          எங்கிருந்தோ கேட்கும்
          தீனமான அழுகுரல்கள் பற்றி

          எல்லாக் குளிர்காலங்களிலும்
          தவறாமல் ஏற்படும்
          மனநோய் பற்றி

          கைவிடப்பட்ட ஒரு வீட்டின்
          திறந்துகிடக்கும்
          எல்லா வாயில்களும் பற்றி

          தழும்பும் இரு முலைகளுக்கு நடுவே
          பார்க்க நேரும்
          ஒரு நீளமான தீக்காய வடு பற்றி

எல்லாவற்றிற்கும் பின்னே
ஒரு கதை இருக்கும்

*

நீ கண்டுபிடிக்காமல்  இருப்பதே
நல்லது

          அவர்கள் ஏன்
           தங்களைக் குறித்து
          அவ்வளவு சிறிய பொய்களைச்
          சொல்கிறார்கள் என்பதை
          அவர்கள் ஏன்
          பேசத் தொடங்கும்போதே
          அழத் தொடங்கிவிடுகிறார்கள் என்பதை

          அவர்கள் ஏன்
          செய்யாத குற்றங்களுக்குக்கூட
          மன்னிப்பு கேட்கிறார்கள் என்பதை

          அவர்கள் ஏன்
          எந்த நிபந்தனையும் இல்லாமல்
          தம்மை ஒப்புக்கொடுத்தார்கள் என்பதை

எல்லாவற்றிற்கும் பின்னே
ஒரு கதை இருக்கும்

*

நீ
பேச்சுக்கொடுக்காதே

          தினமும் டைரி எழுதும்
          பழக்கம் உள்ளவர்களோடு

          இன்னும் கொஞ்சம் பணம் சேர்ந்ததும்
          எல்லாம் சரியாகிவிடும் என்று
          நம்புகிறவர்களோடு

          தனக்குத் தானே பேசிக்கொண்டு
          சாலையைக் கடப்பவர்களோடு

          நிராகரிக்கப்பட்ட காதல்களுக்காக
          குடிப்பவர்களோடு

எல்லாவற்றிற்கும் பின்னே
ஒரு கதை இருக்கும்

*

நீ கதைகேட்க
விருப்பம் கொண்டவன் எனில்

          பணம் கொடுத்து வரவழைத்த
          வேசியிடம் அதைக் கேட்காதே

          உதவி நாடி வந்த அதிதியிடம்
          அதைக் கேட்காதே

          உன்னால் வெற்றிகொள்ளப்பட்டவர்களிடம்
          அதைக் கேட்காதே

          அவமானங்களை நேர்த்தியாக
          மறைத்துக் கொள்பவர்களிடம்
          அதைக் கேட்காதே

எல்லாவற்றிற்கும் பின்னே
ஒரு கதை இருக்கும்

*

நீ கதைகளை அறிந்துதான்
தீரவேண்டுமெனில்
அறிந்துகொள்

          வேட்டையாடப்பட்ட
          ஒரு சிறுத்தையின் கண்களை

          திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட
          ஒரு சிறுவனின் கண்களை

          ஆழ்ந்த புணர்ச்சியில்
          வெறுமையாகும் சாம்பல் கண்களை

          புன்னைகையுடன்
          உன்னை அணைத்துக்கொள்ளும்
          துரோகத்தின் கண்களை

எல்லாவற்றிற்கும் பின்னே
ஒரு கதை இருக்கும்



*** அவரை சந்தித்தும் புகைப்படம் எடுக்காததற்கு... (எல்லாவற்றிற்கும் பின்னே
ஒரு கதை இருக்கும்)